சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரிழப்புகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!

Sunday, June 4th, 2017

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரிழப்புகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.

ஜூன் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அவ்வாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் 5ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.

இதன்போது பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்குரிய நாள் தீர்மானிக்கப்படும். இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வரவுள்ளது.

Related posts: