கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Tuesday, November 7th, 2023

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து நேரிய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

இதன் போது, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சரவைக்கு உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

இதனிடையே

அர்ஜுன ரணதுங்க எந்த கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக முன்வந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கவும் தான் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,  இடைக்கால கட்டுப்பாட்டு குழு அமைப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டிய விஷயங்கள் உள்ளன. இடைக்கால கட்டுப்பாட்டு குழுவினை நிறுவுவதற்கு தேவையில்லை.

அதன்படி, எனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி நான் முடிவு எடுத்துள்ளேன். அமைச்சரவையில், அரசியலமைப்பு திருத்தம் செய்ய, ஒரு குழு நியமிக்கப்பட்டது.

அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அனைத்து வீரர்களையும் அழைத்து இது தொடர்பாக கருத்துக்களை எடுக்க வேண்டும்.

அமைச்சர் இருக்கும் வரை பணிகள் நடக்கும். அமைச்சர் பதவியை காப்பாற்ற மறைவதில் அர்த்தமில்லை. நாட்டின் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்துிருந்தார்..

அர்ஜுன் பெயரை முன்வைக்க காரணங்கள் உள்ளன. அர்ஜுன் எந்தக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டாலும் தேசியப் பட்டியலில் இருந்து அமைச்சர் பதவியை வழங்க நான் தயார்.

கிரிக்கெட் மூலம் இலங்கைக்கு கெளரவத்தை ஏற்படுத்திய அம்மனிதனுக்கு தலைமைத்துவத்தினை வழங்காது வேறு யாருக்கு வழங்க வேண்டும்? நான் அந்த முடிவை எடுத்தேன். என தெரிவித்திரந்தார்

இந்நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: