நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி!

Thursday, November 11th, 2021

அபு தாபியில் இன்று இடம்பெற்ற டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர்களாக களம் பேர்ஸ்டோ 17 பந்தில் 13 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் 24 பந்தில் 29 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

தாவித் மாலன் 30 பந்தில் 41 ஓட்டங்களையும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் ஆட்டமிழக்காது 47 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

டெவோன் கான்வே 44 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீசம் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கிரிஸ் வோகர்ஸ் மற்றும் லைம் லிவிஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

000

Related posts: