யாழ் மாவட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் 75 ஆட்சேபனைகள்!

Saturday, December 23rd, 2017

உள்@ராட்சி சபைத்தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் தொடர்பில் 75 ஆட்சேபனைகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சேபனைகள் சட்டரீதியில் ஆராயப்பட்டு தகுந்த நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச்செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 16 உள்@ராட்சியின் சபைகளில் போட்டியிட நேற்று 10 கட்சிகளும், 8 சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. மொத்தமுள்ள 17 சபைகளில் சாவகச்சேரி நகர சபைக்காக வேட்;பு மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்தள்ளது. இதன் பின்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்த கட்சியின் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது 75 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றிருந்தன. கிடைக்கப்பெற்ற ஆட்சேபனைகள் தொடர்பிலும் சட்டரீதியாக அராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவத்தாட்சி அலுவலர் கூறினார்.

Related posts:

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முடக்கப்படாது - மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இரா...
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - தொற்...
அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொண்டால் அடுத்த ஒரு சில வருடங்களில் பொருளாதாரத்தில் வெற்றிகொள்ளவு...