இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – தொற்று நோயியல் பிரிவு!
Monday, February 8th, 2021
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நேற்றையதினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
முன்பதாக கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்க எமது அரசாங்கம் இடமளிக்காது - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுத...
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் ...
முகப்பூச்சு மற்றும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
|
|
|


