O/L பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்!

Tuesday, November 21st, 2017

அடுத்த மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத தெரிவித்துள்ளார்.

பரீட்சை மத்திய நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்க போவதில்லை என்று பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார்.

பரீட்சை மேற்பார்வையாளர்களின் வசதி கருதி, இம்முறை பரீட்சை நடைபெறும் வகுப்புகளில் 20 மாணவர்களுக்கு மாத்திரமே இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சையில் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: