இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்!
Monday, August 15th, 2022இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினுடன் உரையாடிய பிரதமர் ரணில்!
குடிநீருக்கான வரி அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது – முன்மொழிவை முற்றாக நிராகரித்தது ஈழ மக்கள் ஜனநா...
தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி மறைத்து காப்புரிமை – யாழ். மாநகர சபையின் பித்தலாட்டத்தால் இழப்...
|
|
|


