குடிநீருக்கான வரி அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது – முன்மொழிவை முற்றாக நிராகரித்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Friday, December 7th, 2018

யாழ் மாநகரில் வாழும் வறிய மக்களுக்கு இலவச குடிநீர் திட்ட இணைப்புக்களை வழங்குவதுடன் அவ் இணைப்புக்கள் மூலம் வழங்கப்படும் நீருக்கு கட்டணம் அறவிடப்படும் முறையை உடன் அமுலுக்கு கொண்டுவரும் வகையில் இந்த பாதீடு அமைய வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்திற்கான விஷேட கூட்டத்தொடர் இன்றையதினம் மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களான   இரா செல்வவடிவேல் மற்றும் றீகன் ஆகியோர் அவர் இவ்வாறு வலியுறுத்தினர்.

தொடர்ந்தும் உரையாற்றிய மாநகரசபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் அவர்கள் தெரிவிக்கையில் –

யாழ் மாநகரசபை என்பது மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான சேவைகளையே முன்னெடுக்க வேண்டும். ஆனால் இந்த பாதீட்டில் மக்களை மேலும் வரிச்சுமை ஊடாக வெறுவிலிகளாக்கும் நிலையே காணப்படுகின்றது.

அதாவது இதுவரைகாலமும் இருந்துவந்த குடிநீருக்கான கட்டணத்தை இம்முறை 100 வீதத்தால் அதிகரித்துள்ளமையானது எவ்வகையிலும் நியாயமானதாக அமையாது. ஆனால் இந்த வரி அதிகரிப்பை பார்க்கின்ற போது அது ஒரு வியாபார நோக்கம் கொண்டதாக காணப்படுவதாகவே தெரிகின்றது.

அத்துடன் மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணங்கள் மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான குடிநீருக்கான வரியை யாழ் மாநகரசபை தனது புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அதிகரிப்பு செய்வதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது அந்தவகையில் இந்த முன்மொழிவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முழுமையாக நிராகரிக்கின்றது என்றார்.

Related posts: