தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி மறைத்து காப்புரிமை – யாழ். மாநகர சபையின் பித்தலாட்டத்தால் இழப்பீடு பெறமுடியாது திண்டாடம்!

Saturday, August 1st, 2020

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி குறைத்து காப்புறுதி செய்யப்பட்டமையாலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு 2014 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் 3 கோடியே 25 இலட்ச ரூபா பெறுமதியான புதிய துியணைப்ப வாகனம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனாலும் அன்றைய மாநகரசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந் தபின்னர் குறித்த வாகனத்தின் காப்புரிமை அன்றைய ஆணையாளரால் வெறும் 60 இலட்சத்திற்கே செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வாகனம் விபத்துக்குள்ளாகி முழுமையான சேதமடைந்துள்ளதால் அதனை திருத்த பல இலட்சம் நிதி தேவைப்படுகின்றது.  

அத்துடன் காப்புறுதி நிறுவனம் குறித்த வாகனத்தின் முழுமையான காப்புறுதியை வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஒரு தொகையை சபையின் பொறுப்பிலேயே செலவிடப்பட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

குறைந்த தொகையில் காப்புரிமை செய்தமை ஆணையாளரின் முழுமையான தவறு என்றும் அவரே இந்த விடயத்திற்கு பொறுப்புக் கூறியாக வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது.

இதனிடையே மாநகர சபையின் கணக்காளர் இந்த விடயத்தில் எனது பொறுப்பு ஏதும் கிடையாதென தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆணையாளர், ஏதோ தவறு நடந்திருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அது என்னுடைய பிழையல்ல. முதலில் 68 இலட்சம் ரூபா பெறுமதியில் காப்புரிமை செய்யப்பட்டிருந்தது அதையே நானும் செய்தேன். எனக்கு முன்பு இருந்த ஆணையாளர்கள் இதனைத்தான் செய்துள்ளார்களென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


திருமலையில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உணவுப் பொருட்கள் வழங்கி...
நாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராயவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது - பி...
கடலுணவுகள், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்...