பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முடக்கப்படாது – மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இராணுவத்தளபதி!

Monday, December 7th, 2020

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படாது ஆனால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை நோயாளிகள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் குறித்து கொழும்பில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதே எப்போதும் நல்லது என்றும் அவர் மலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் நிலைமை மீளாய்வு செய்யப்படும் என்றும் தேவையின்றி ஒன்று கூடுவதை தடுக்க மேலதிக சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிகள் இருக்கும் இடங்களையும் மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசிக்கும் இடங்களிலும் கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க அந்த பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்துவோம் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்’துள்ளார்..

முழு பொலிஸ் பகுதிகளையும் முழுமையாக முடக்குவதை விட, அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளை தனிமைப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த வாரத்திற்குள் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் மாத இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் இது பொதுமக்களின் கைகளில் இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், நோயாளிகளை அடையாளம் காண நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: