2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எதிர்பார்ப்பு!,

Monday, October 2nd, 2023

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்,

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள செயற்பாடு பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், வணிக செயற்;பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொள்கை விகிதங்கள் குறைக்கப்பட்டதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வணிக வங்கிகளுக்கு தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு நாட்டின்;; வர்த்தக நடவடிக்கைகளில் அபிவிருத்தி ஏற்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கபே அமைப்பு வல...
போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...