கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Friday, June 15th, 2018

கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துள்ள தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் வடக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மூலம் இந்த ஆண்டின் ஆறு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற கூட்டுறவின் அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகள் தொடர்பான தரவுகளைத் திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் சங்கங்களின் செயற்பாடு மற்றும் இந்த நடவடிக்கையில் அதிக முன்னேற்றம் காணப்படுவதாக வடக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பரிணமிப்பு நாற்பது வரையிலான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுக்கு முன்னர் நிறைவுறுத்தப்படும்.

தற்போது இந்த ஆண்டின் அரையிறுதி ஆண்டுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்துள்ள தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Related posts: