கண்டியில் 3 உயிர்களைப் பலியெடுத்த விவகாரம் – உரிமையாளர் கைது!

Tuesday, September 29th, 2020

கண்டி குபூவெலிகடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவெலிகட பகுதியில் கடந்த 20 ஆம் திகதி காலை 5 மாடி கட்டடமொன்று இடிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அந்த விபத்து தொடர்பில் இதுவரையில் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: