பனைசார் உற்பத்தியாளர்கள் வடக்கில் அதிகரிப்பு!

Tuesday, June 26th, 2018

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.

எமது மாகாணத்தின் அடையாளமாகப் பனை மரங்கள் காணப்படுகின்றன. பனையின் ஒவ்வொரு பாகங்களும் பல்வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். ஆகவே பனைசார் உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யும் பயிற்சிகளை சபை வழங்கி வருகின்றது.

இதுவரை ஆயிரத்து 95 பேர் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியாளர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு 906 உற்பத்தியாளர்கள், 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 91 உற்பத்தியாளர்கள், 2017 ஆம் ஆண்டு ஆயிரத்து 237 உற்பத்தியாளர்கள் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துச் செல்கின்றது. ஆகவே உற்பத்தியாளர்களை அதிகரிப்பதற்கு அவர்களுக்கான பயிற்சிகள் தற்போது கிராம மட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: