எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
Monday, February 14th, 2022எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அத்துடன் யார் என்ன சொன்னாலும், யார் என்ன நினைத்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்நோக்கவும், நடத்தவும் தயார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில் –
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு நாம் தயாரில்லை எனவும் சிலர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் ஆணையை பாதுகாக்கும் நோக்கில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
இதேநேரம் சிலர் பல்வேறு விடயங்களை நினைப்பார்கள் பேசுவார்கள் எனினும், நாம் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயாராகவே இருக்கின்றோம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|