யாழ். நிலைவரம் சமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்: மத்திய மாகாண ஆளுநர் டிலுக்கா ஏக்கநாயக்க!

Monday, October 24th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது யாழ்ப்பாணத்தில் உருவாகியிருக்கிற நிலைமையைச் சுமூகமான முறையிலும், அமைதியான முறையிலும் தீர்த்து வைக்க வேண்டுமெனவே  எதிர்பார்க்கிறோம்  எனத் தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் டிலுக்கா ஏக்கநாயக்க வடக்கிலுள்ள நிலைமைகளைக் குழப்புவதற்குப் பல்வேறு குழுக்களும், அமைப்புக்களும் முயன்று வருகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராயும் பொருட்டு யாழ்.மாவட்டத்திற்கு இன்று திங்கட்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட மத்திய மாகாண ஆளுநர் டிலுக்கா ஏக்கநாயக்க யாழ். மாவட்டத்திலுள்ள பல்வேறு மட்ட உயரதிகாரிகளுடனும் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.  அதனைத் தொடர்ந்து நண்பகல்-12 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற  விசேட ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கமைய நாம் இங்கு வருகை தந்துள்ளோம்.  நான் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு இன்னமும் செல்லவில்லை.

நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்ற வகையில் சட்டத்துக்குட்பட்ட வகையில் தான் இந்த விடயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

unnamed (2)

Related posts: