யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
Friday, July 28th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(28) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான், சேந்தாங்குளம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், ஆலடி, கருங்காலி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சமூகத் தொற்றாக மாறுகின்றதா கொரோனா - அச்சத்தில் தென்னிலங்கை மக்கள்!
வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கியின் ஆளுநர் தெரி...
இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம் - யுத்தத்தில் மிக அனுபவம் பெற்ற நாடு ...
|
|
|


