வெங்காயத்தை சேமித்துவைக்க யாழ். விவசாயிகளுக்கு 40 கொட்டில்கள்!

Friday, May 11th, 2018

யாழ். மாவட்டத்தில் வெங்காயத்தை சேமித்து வைப்பதற்கு நாற்பது பாதுகாப்பு கொட்டில்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தக் கொட்டில்கள் அமைப்பதற்காக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கொட்டில்களும் ஒரு இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ளது. இதில் ஒரு கொட்டிலுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா நிதியை திணைக்களம் வழங்கும். மீதியான நிதியை தெரிவு செய்யப்படும் பயனாளிகள் பொறுப்பேற்க வேண்டும்.

கொட்டில்கள் யாவும் 24 அடி நீளமும் 14 அடி அகலமும் 8 அடி உயரத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் கொட்டில்களின் கூரைகள், கிடுகுகளால் வேயப்பட்டிருக்க வேண்டும்.

சுமார் ஐயாயிரம் கிலோ எடை கொண்ட வெங்காயத்தை சேமித்து வைக்க கூடிய வகையில் இந்த கொட்டில்கள் அமைக்கப்படும்.

இதில் உரும்பிராயில் – 09, புத்தூரில் – 07, அம்பனில் – 04, உடுவிலில் – 05, கொட்டில்களும் கரவெட்டியில் – 03, சண்டிலிப்பாயில் – 07, தெல்லிப்பழையில் – 05 கொட்டில்களுமாக நாற்பது வெங்காய சேமிப்பு கொட்டில்கள் அமைக்கப்படும்.

Related posts:


வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...
கட்டணங்களை செலுத்தும் புதிய முறை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அற...