கண்டியை மையமாகக் கொண்டு புதிய பேருந்து சேவை!

Thursday, July 7th, 2016

கண்டியை மையமாகக் கொண்டு புதிதாக பேருந்து சேவையை அறிமுகப்படுத்த மத்தியமாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த திட்டம், திகண – கண்டி மற்றும் கடுகன்னாவ – கண்டி உள்ளிட்ட வீதிகளுடன் அவற்றிற்கு இடைப்பட்ட மற்றுமொறு வீதியினையும் இணைத்து இந்த பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஆய்விற்கு அமையவே இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்து.

இந்த புதிய திட்டத்தின் ஊடாக பேருந்துகளுக்கிடையில் போட்டிதன்மை ஏற்படாத வகையில் பேருந்து பயணிக்கும் தூரத்திற்கு அமைவாக வருமானத்தை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பேருந்துகளில் சீ.சீ.ரீ.வி கெமராக்கள் மற்றும் ஜி பி எஸ் தொழிநுட்பம் மற்றும் தொலைபேசிகளை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts:

பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்...
ஐநாவின் 46/1 தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரித்தது இலங்கை – பத...
5 வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2023 பட்ஜட் மூலம் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ர...