மீண்டும் தொழுநோய் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!

Wednesday, September 4th, 2019


இலங்கையில் மீண்டும் தொழுநோய் பரவும் அபாயம் இருப்பதால், மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பதிவுகள், மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக கம்பாஹா மாவட்டத்தின் தொற்றுநோயியல் பிரிவுவைத்திய அதிகாரி கிருஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு 54 நோயாளிகளும் , வத்தளையில் 29 பேரும் , கட்டானவில் 23 பேரும் , ஜா-எலவில் 23 பேரும் , களனியில் 21 பேரும் , திவுலபிட்டியவில் 14 பேரும் கம்பாஹா 14 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

கம்பாஹா மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்ற மொத்த தொழுநோயாளிகளில் 273 பேர் என்றும், அவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் 79 அடங்கியுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவுவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொழுநோய் தொற்றக்கூடியது என்பதால், நோய் தொற்று ஏற்பட்டவரின் குடும்பமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்ண்டுமெனவும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு சமூகத்தில் 90% ஆனவர்கள் இயற்கையாகவே தொழுநோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதாகவும், இந்த நோய் தொற்றுநோயாக இருந்தாலும், வெடிப்பு மிகப் பெரியதாக அமையவில்லை என்றும் இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்நோய் தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடும்படியும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை ஒரு நபரின் உடலில் ஐந்து வரையான வடுக்கள் இருந்தால், ஆறு மாதங்களுக்குள் அது பெருகி ஐந்து இடங்களுக்கு மேல் இருந்தால், சரியான சிகிச்சையுடன் இந்நோயை குணப்படுத்த முடியும்ம் என்றும் வைத்தியர் சமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: