இ.போ.ச. ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்க பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தின் பிரச்சினைகளை நிதியமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் சம்பள மற்றும் பதவி உயர்வு தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைக்கு அமைய தீர்ப்பதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாறசிங்க நேற்று மாலையில் சகல பஸ் சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோருடன் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
Related posts:
யாழ் - கொழும்பு புகையிரத சேவை பாதிப்பு
ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு நினம் அனுஸ்டிப்பு!
தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!
|
|