தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!
Friday, January 18th, 2019
தைப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கடலிலும் குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும் 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும் ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை திருகோணமலை, சங்கமித்தை கடற்கரையில் நேற்று முன்தினம் சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலைப் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related posts:
பருவமழை உரியகாலத்திற்கு முன் ஆரம்பிக்கலாம- வளிமண்டலவியல் திணைக்களம்!
பொருளாதார நெருக்கடி - உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் பல்வேறு நோய் நிலைமைகளுக்குள்ளாகி மனநல பிர...
|
|
|


