பருவமழை உரியகாலத்திற்கு முன் ஆரம்பிக்கலாம- வளிமண்டலவியல் திணைக்களம்!

Saturday, May 19th, 2018

தென்மேற்கு பருவமழை உரிய காலத்திற்குமுன் ஆரம்பிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுவாத்தியநிலை ஆய்வு மற்றும் அறிவிப்புபிரிவின் பணிப்பாளர் அனுஷா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி தகவல் தெரிவிக்கையில் வழமையாக வருடாந்தம் ஜூன் மாதமளவில் அல்லது அதற்குப் பின்னரோ ஆரம்பமாகும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலநிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.  இம் மாதம் இறுதிபகுதியில் இருந்தே நாட்டின் தென்மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளான காலி மாத்தற களுத்துறை அம்பாந்தோட்டை இரத்தினபுரி மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக கூறினார்.

மேற்படி மாவட்டங்களில் கடும் மழை பெய்வதுடன் மேற்கு தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களை சேர்ந்த ஏனைய மாவட்டங்களில் மழை பெய்வதுடன் மத்திய சப்ரகமுவ ஊவா மற்றும் உள் மாவட்டங்களில் 100 மி.மீ வரையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

2016 2017ம் ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக இம் மாவட்டங்களில் கடும் மழையும் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது போல் இவ்வருடமும் ஏற்படுமா என ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் பெரும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு இன்னும் சிலநாட்களோ அல்லது பல நாட்களோ ஆகலாம். எவ்வாறாயினும் இவ்வருடம் எதிர்வரும் மாதங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார்.

Related posts:


சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்...
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில...
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் - எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்க...