கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் பலி!

Sunday, March 28th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 11 பேர் மரணித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நேற்று இடம்பெற்ற விபத்துக்களினால் 8 பேர் மரணித்தனர். நேற்றைய நாளுக்கு முந்தைய நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மூவர் நேற்று உயிரிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நான்கு பயணிகளும், பாதசாரிகள் மூவரும், உந்துருளி செலுத்துநகர்கள் நால்வரும் நேற்று மரணித்தனர்.

சாரதிகளுக்கு ஏற்படும் நித்திரைக் கலக்கம், உடல்நலக் குறைவு, மது அருந்தியிருத்தல், கவனயீனம் மற்றும் வீதியின் குறைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் வாகனங்களை செலுத்துதல் என்பன அண்மைக்கால வாகன விபத்துக்;களுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தங்களின் வாகன சாரதிக்கு மதுபானம் அருந்தக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அத்துடன், சாரதி, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துவாராயின், வேகத்தைக் குறைத்து பயணிக்குமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்.

அனுபவமற்ற வீதிகளில் பயணிக்கும்போது, அந்த வீதிகளின் தன்மைக்கு ஏற்றவாறு வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் ஏற்படக்கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உந்துருளி செலுநர்களும், பாதசாரிகளும் அதிகளவில் விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில், வீதி விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அது அனைவரின் பொறுப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: