முறுகண்டி பகுதியில் பேருந்து விபத்து!
Friday, October 26th, 2018
திருமுறுகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் பிரதான வீதியை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரத்னாரவல்ஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் குறுக்கிட்டதால் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது.
மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனயீனமே குறித்த சம்பவத்துக்கு காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!
புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ...
|
|
|


