ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது – பிரதிபொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது பிரதிபொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களை மருத்துவமனைகளிற்கு சிகிச்சைக்காக அனுமதிப்பார்களா என கேள்விக்குறியுடன் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவமனைகளின் இயக்குநர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கும் சாதாரண காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான உரிமையுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உரிமை மீறப்படாமலிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாhறு அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|