அதிபர்கள் கொழும்பில் போராட்டம்!

Saturday, July 23rd, 2016

தரம் 3 பெற்ற அதிபர்களுக்கான பாடசாலைகளை வழங்குவதில் ஏறபடும் தாமதத்தைக் கண்டித்தும், உடனடியாக பொருத்தமான பாடசாலைகளை வழங்கக்கோரியும் நாடளாவிய ரீதியில் தலைநக‌ர் கொழும்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிபர்கள் ஒன்று கூடித் தமது உரிமைக்காகப் நேற்று (22)போராடினர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம்விஹாரமாதேவி பூங்காவில் ஆரம்பித்து நடைபவனியாக பிரதமர் அலுவலகத்தை அடைந்தது. பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.

இதன்போது – மூன்றாம் தவணை ஆரம்பிக்கும்போது பரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கு பாடசாலை வழங்கப்படவேண்டும் எனவும், அநாவசியமாக அரசியல் ரீதியான – அதிபர்சேவை பிரமாணக்குறிப்புக்கு மாறாக எந்தவொரு நியமனமும் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளதாகவும், இவை மீறப்படும் சந்தர்ப்பத்தில் – தரம்பெற்ற சகல அதிபர்களையும் நாடளாவிய ரீதியில் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Related posts: