மருதங்கேணி பிரதேசத்தில் 32 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!
Friday, November 11th, 2016வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு மேலும் 32 வீடுகள் கட்டும் பணிகள் அரம்பமாகிவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சினால் இப் பிரதேசத்திற்கென இவ்வாண்டு 312 வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. அவைக் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2ஆம் கட்டமாக 32 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டதையடுத்து அவற்றை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கவென மேலும் 200 வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கே.கணேஸ்வரன் விடுத்த கோரிக்கையை மீள்குடியேற்ற அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை மீள்குடியேற்ற அமைச்சு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
அனைத்து எய்ட்ஸ் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை!
இலங்கையில் தலையிடுவதற்கு ஐ.நாவுக்கு உரிமை கிடையாதாம் - வாசுதேவ நாணயக்கார!
கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு...
|
|