அனைத்து எய்ட்ஸ் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை!

Friday, September 23rd, 2016

நாட்டில் அனைத்து எச்ஐவி தொற்றுள்ள நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால கூறினார்.

தற்போது நாட்டில் 2436 எச்ஐவி நோயாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அதற்கான வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்காக 30 சிகிச்சை மத்திய நிலையங்கள் சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரக் கல்வி காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறினார். பாலியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் அறிவூட்டப்பட வேண்டும் என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால மேலும் கூறினார்.

HIV-AIDS-dari-www.arenaterbaru.com_2

Related posts: