இலங்கையில் தலையிடுவதற்கு ஐ.நாவுக்கு உரிமை கிடையாதாம் –    வாசுதேவ நாணயக்கார!

Wednesday, October 25th, 2017

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகளுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

ஐ.நா தமது அதிகாரத்தை கலவரங்களும் யுத்தங்களும் இடம்பெறுகின்ற நாட்டிலேயே காண்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சோஷலிச மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை ஐக்கிய நாடுகள் இலங்கை மீதான தலையீடுகளை நிறுத்தப்போவதில்லை என ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோடி கிரெசப் கூறியிருக்கின்றார்.

Related posts: