நாடாளுமன்ற குழுக்களை அமைக்க நாடாளுமன்றம் அனுமதி – நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, August 28th, 2020

நாடாளுமன்றத்தின் ஆறு குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள், நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சட்டவாக்க நிலையியற் குழு, நிலையியற் கட்டளைகள் குழு, நாடாளுமன்ற சபைக் குழு, ஒன்பதாது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு, பொது மனுக்கள் பற்றிய குழு, நாடாளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களுக்கான குழு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: