உற்பத்தித்திறன் குன்றிய மாடுகளை நல்லின மாடுகளாக மாற்றுவதால் உற்ப்பத்தியை அதிகரிக்க முடியும்  – வடமாகாண கால்நடை சுகாதார உற்ப்பத்தித்திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, December 21st, 2017

உற்ப்பத்தித்திறன் குன்றிய மாடுகளை நல்லின மாடுகளாக மாற்றுவதால் பசு மாடு சார்ந்த உற்ப்பத்திறன்களை அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்ப்பத்திகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள உற்ப்பத்தித்திறன் குன்றிய மாடுகளை நாம் நேரடியாகவோ அல்லது உடனடியாகவோ வினைத்திறன் கூடிய மாடுகளாக மாற்ற முடியாது. ஆகவே உற்ப்பத்தித்திறன் குறைந்த மாடுகளை நல்லின மாடுகளுடன் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சினைப்படுத்தல் செய்வதனூடாக எதிர் காலத்தில் உள்ளூர் மாடுகளின் சந்ததியை அதிக உற்ப்பத்தித்திறன் கொண்ட பசு மாடுகளாக மாற்ற முடியும். இதன் மூலம் உருவாகும் கன்றுகள் தாய் மாட்டை விட உற்ப்பத்தித்திறன் வாய்ந்தவையாக இருக்கும்.

எனினும் எமது மாகாணத்ததைப் பொறுத்த வரையில் ஒரு சில கால்நடை வளர்ப்பாளர்கள் இந்த முறையை விரும்புவதில்லை.

உற்ப்பத்தித்திறன் கொண்ட கன்றுகளை உருவாக்குவதற்காக எமது திணைக்களம் சினைப்படுத்தல் செயற்ப்பாட்டை மானிய அடிப்படையில் மேற்க்கொண்டு வருகின்றது. எனவே கால்நடை வளர்ப்பாளர்கள் இவ்வாறான செயற்ப்பாட்டை மேற்கொள்வதன் ஊடாக அதிக உற்ப்பத்தித்திறன் கொண்ட மாடுகளை வளர்க்க முடியும் – என்றார்.

Related posts: