கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்10 ஆம் திகதி முதல் போராட்டம்!

Friday, April 7th, 2017

புகை­யி­ரத கடவை காப்­பா­ளர்­களின் கோரிக்­கை­களை அரசு நிறை­வேற்­றா­விட்டால் வடக்கு கிழக்கில் எதிர்­வரும் 10 ம் திகதி தொடக்கம் காலவரை­யறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பணிப்­பு­றக்­க­னிப்பில் ஈடு­ப­டப்­போ­வ­தாக வட­கி­ழக்கு புகை­யி­ரத கடவை காப்­பாளர் ஒன்றி­யத்தின் தலைவர். ஏஸ்.ஜே.ரொகான் ராஸ்­குமார் தெரிவித்துள்ளார்.

வட­கி­ழக்கு புகை­யி­ரத கடவை காப்­பானர் ஒன்­றி­யத்தின் விசேட கூட்டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (04) மாலை  மட்­டக்­க­ளப்பு ஊறணி புகையிரத கட­வைக்கு அரு­கி­லுள்ள தனி­யார்­கல்வி நிறு­வன மண்­ட­பத்தில் ஒன்­றி­யத்தின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட தலைவர் சீ.ஜெய­காந்தன் தலைமையில் இடம்­பெற்­றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 கடந்த 4 வரு­டங்­க­ளாக வட­கி­ழக்கில் 1230 போ் புகை­யி­ரத கடவை காப்­பா­ளர்­க­ளாக நாள் ஒன்­றிற்கு 250 ரூபா வீதம் மாதாந்தம் 7 ஆயி­ரத்து 500 ரூபா சம்­ப­ளத்­திற்கு கட்­டா­யத்தின் போில் அரச, தனியார், தற்­கா­லிக ஊழி­யர்கள் போன்ற எந்­த­வி­த­மான நிபந்­த­னை­களும் இன்றி அடிப்­படை  தொழில் சட்­டத்­திற்கு முர­ணான விதத்தில் பணிக்கு அமர்­தப்­பட்டு நாள் ஒன்­றிற்கு  8 மணித்­தி­யாலம் கட­மை­களை செய்­து­வ­ரு­கின்றோம் .

இந்த நிலையில் எங்­க­ளுக்கு புகை­யி­ரத திணைக்­க­ளத்­திற்­கு­ரிய நேர அட்­வணை வழங்­கப்­ப­டாமல் புகை­யி­ரதம் வரு­வதை அவ­தா­னித்து  ஒரு பக்க கட­வையை மூடி மற்­று­பக்க கட­வையை மூடக் கூடாது நேர­மில்­லாது நிலையில் கட­வை­களை பல்­வேறு அசௌவ்­க­ரி­யங்கள் மத்­தியில் பாது­காத்­து­வ­ரு­கின்றோம். இவ்­வாறு பணி­யாற்­றி­வ­ரு­கின்ற நிலையில் தொடர்ந்து 180 நாட்கள் பணி­யாற்­றினால் நிரந்­தர நிய­மனம் வழங்கப்படவேண்டும் இருந்தும் இது­வரை எமக்கு நிரந்­தர நிய­ம­னமே அல்­லது தற்­கா­லிக கட­மை­யா­ளர்­களே என்று எந்­த­வி­த­மான எழுத்து மூலமான கடி­தங்கள் கூட வழங்­கப்­ப­டாமல் உள்ளதுடன் கடந்த ஆட்சி காலத்தில் இருந்த போக்­கு­வ­ரத்த அமைச்சர் குமார வெல்கம் தென்னிலங்கையைச் சோ்ந்த ஆயிரம் பேரை புதி­தாக புகை­யி­ரத திணைக்­கள ஊழி­யர்­க­ளாக நிய­மித்தார்

இத­னை­ய­டுத்து போக்­கு­வ­ரத்து அமைச்சர் பொலிஸ் மா அதிபர் புகை­யி­ரத திணைக்­கள பொது முகா­மை­யாளர் போன்ற சம்­மந்­தப்­பட்ட அதிகாரிகளை சந்­தித்து எமக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­க­வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் அதற்கு எந்­த­வி­த­மான தீர்வும் வழங்கப்படாதைதை­ய­டுத்து மத­வாச்­சியில் பிர­த­ரான புகை­யி­ரத நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு புகை­யி­ர­த­சே­வையை தடை­செய்தோம்.

அத­னை­ய­டுத்து வட­மத்­திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விவ­சாய அமைச்சர் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக எழுத்து மூலம் கடிதம் வழங்­கிய பின்னர் அரசின் 24 திணை­கள அதி­கா­ரிகள், பொலிஸ்மா அதிபர், புகை­யி­ரத திணைக்கள் பொது முகா­மை­யாளர், சிவில் பாது­காப்பு பொறுப்­ப­தி­காரி  உட­பட பல அதி­க­ரிகள் எங்­களை அழைத்து அவ­மா­னப்­ப­டுத்தி அச்­சு­றுத்தி அனுப்­பினர்.

1985 ம ஆண்டில் இருந்து இது­வரை புகை­யி­ரத வீதிக்­க­டவை காப்­பா­ளர்­க­ளுக்­கான வெற்­றிடம் சரி­யாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை இந்த நிலையில் 1200 பேரை புதி­தாக புகை­யி­ரத திணைக்­கள ஊழி­யர்­க­ளாக நிய­மிப்­ப­தற்கு பட்­டியல் இடப்­பட்­டுள்­ளது இவர்­களில் வட கிழக்கை சோ்ந்தவர்கள் எவரும் இல்லை அதே­வேளை எங்­களை கூட உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை வடக்கில் 34 விபத்­துக்கள் இடம்­பெற்­றது  இதில் 12 உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் இவைகள்  தன்­னி­யங்கி புகை­யி­ரத கடவை கதவு மற்றும் புகை­யி­ரத திணைக்­கள கடவை ஊழி­யர்கள் பணி­பு­ரிந்த இடத்­திலே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.   இவ்­வா­றான நிலையில் எமக்கு சம்­பள உயர்வு எதுவம் இல்லை மருத்­துவ விடுமுறை இல்லை மாதத்தில் 31 நாள் வந்தால் 30 நாளுக்கு மட்டும் தான் சம்­பளம் இவ்­வாறு மாதாந்தம் 7 ஆயி­ரத்து 500 ரூபா சம்­ப­ளத்­துக்குள் பல்­வேறு இடர்­பா­டுகள் மத்­தியில் வாழ்­கையை நடாத்­தி­வ­ரு­கின்றோம் எனவே இந்த புது­வ­ரு­டத்தில் ஆவது நாங்கள் எமது பிள்­ளைகள் மனை­வி­யுடன் ஓன்­றாக இருந்து ஒரு நேர சாப்­பாட்டை கூட சாப்­பி­ட­வேண்டும்.

எனவே எமக்கு புது­வ­ருட மற்றும் ஏனைய பண்­டிகை காளங்­களில் ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­படும் புதுவருட கொடுப்பணவை வழங்கப்படவேண்டும். 2- புகை­யி­ரத  திணைக்­கள சிற்­றூ­ழிர்­க­ளாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும், அல்லது வீதி அதிகார சபையில் வீதி பரமரிப்பாளர்களாக இருக்கும் வெற்றிடத்திற்கு எங்களுக்கு நியமனம் வழங்கவேண்டும். இவ்வாறான எமது அடிப்படை கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும் இல்லாவிடில் எதிர்வரும் 10 திகதி முதல் பணிப் புறக்கனிப்பில் ஈடுபட்டனர்.

Related posts: