மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Saturday, March 2nd, 2024
நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும்.
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பநிலை கட்டுநாயக்க பகுதியில் உணரப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு 35.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிங்கப்பூர் முதலாளியை தாக்கிய சீன தொழிலாளி கைது- இலங்கையில் சம்பவம்!
காலநிலை மாற்றத்தால் 2020 ஆம் ஆண்டில் ஆசியாவுக்கே பெரும் பாதிப்பு - கிறிஸ்டியன் எய்ட் நிவாரண அமைப்பு ...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்வு வழங்கப்படும் - வெளிநாட்ட...
|
|
|


