எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, June 9th, 2020

சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 15 ஆம் திகதிமுதல் மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவர்களுக்கான பரிட்சைகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாக பேராசிரியர் அமரதுங்க மேலும் கூறினார்.

அத்தோடு இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படவுள்ளன என்றும் ஒரு அறைக்கு ஒரு மாணவர் என்ற ரீதியில் வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: