பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது – சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ர தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினருக்கும் சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு இன்றையதினம் கூடியிருந்தது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பு சுகாதார அமைச்சருடனான நேற்றைய சந்திப்பில் கோரியிருந்தது.

அதன்படி, சுகாதார அமைச்சரினால், குறித்த தொழிற்சங்கங்களினது கோரிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹீபால தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழு, இன்றையதினம் சுகாதார அமைச்சில் கூடியிருந்த நிலையில், சுகாதார தொழிற்சங்கங்கள் இறுதியாக நிதியமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், சுகாதார தொழிற்சங்கங்களின புதிய யோசனை மற்றும் பரிந்துரைகள் குறித்த குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் நீண்ட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, இந்த யோசனை தொடர்பான சுகாதார அமைச்சின் இறுதி தீர்மானம் எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு விசேட குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: