மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விரைவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 20th, 2018

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து விரைவாக நவடிக்கை எடுப்பதுடன் கிளிநொச்சி  மாவட்ட மக்களது அவசிய தேவைகள் தொடர்பாகவும் எமது அமைச்சினூடாக விரைவாக ஆராயப்பட்டு சாத்தியமான திட்டங்கள் மிகவிரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு இந்து சமய விவகார மற்றும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொது சபை அங்கத்தவர்களுக்கான சந்திப்பு ஒன்று இன்று கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கட்சியின்  கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்தின் பொதுச்சபை அங்கத்தவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக மக்களுக்கு பயன் உள்ளதாகவே பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாக தலைமன்னார் ராமேஸ்வரம் ஊடான கப்பல் போக்குவரத்து இன்று ஐயப்பன் நோன்பை அனுஷ்டிக்கும் பக்தர்கள் மட்டும் அல்லாது சுற்றுலா துறையினர் என குறைந்த செலவில் தமது போக்குவரத்துகளை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும் என தெரிவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனநாயக தன்மையோடு நடைமுறைக்கு சாத்தியமான மக்களின் நீண்டகால  கோரிக்கையான வீட்டு திட்டத்தை இம்மாதம்முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்

எனவே கட்சியின் அங்கத்தவர்கள் மக்களின் உண்மையான தேவைகளை சரியான முறையில் அமைத்து அதற்கு ஏற்றவாறு முன் மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

இந்த சந்திப்பில் பச்சிலைப்பள்ளி கரைச்சி கண்டாவளை பூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் மற்றும் பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் மக்களின் அத்தியவசிய கோரிக்கைகள் பலவற்றையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

20181120100742_IMG_7314 20181120101557_IMG_7331 20181120104704_IMG_7339

Related posts:

உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக  65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக விரைவில் அமைச்சரவைப் ...
அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் த...