திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது – விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, November 2nd, 2022


கடல்டைப் பண்ணைகளுக்கு முதலீடு செய்வதாக கூறிக்கொண்டு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் சீ்னா ஊடுருவி இருப்பதாக ஆதாரமற்ற பொய்களை மீண்டும் மீண்டும் கூறினாலும், அது உண்மையாகாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்று(02.11.2022) நடைபெற்ற கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

“கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை செய்யும் நோக்குடன் இந்திய மற்றும் சீன ஆகிய நாடுகளை சேர்ந்த இரண்டு தரப்பினர் என்னை சந்தித்திருந்தனர்.

எமது மக்களினால் எதிர்பார்ப்போடு அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கு கடலட்டை குஞ்சுகள் தேவையாக இருக்கின்றன.

ஆகையால், வருடந்தோறும் இரண்டரை கோடி கடலட்டை குஞ்சுகளை வழங்கக் கூடிய தரப்பினரோடு தொடர்ந்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக இரண்டு தரப்பினருக்கும் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றேன்.

எனது எதிர்பார்ப்பை தங்களினால் நிறைவேற்ற முடியும் என்று இரண்டு தரப்பினரும் தெரிவித்திருக்கின்ற போதிலும், இதுவரை எந்தவிதமான முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை.

ஆக, 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட குயிலான் நிறுவனத்தை சேர்ந்த சீனப் பிரஜைகள் சிலரைத் தவிர வேறு வெளிநாட்டுப் பிரஜைகள் யாரும் இங்கே – இதுவரை கடலட்டைப் பண்ணைகளுடன் தொடர்புபட்டு இல்லை என்தே உண்மை.

எனவே மக்களை குழப்பும் வகையில் குறுகிய நலன்களுடன் சொல்லப்படுகின்ற பொய்கள் தொடர்மாக விழிப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், தன்னைப் பொறுத்தவரையில், இந்தியாவா சீனாவா என்ற நிலையேற்படின், இந்தியாவே முன்னிலையில் இருக்கும் என்பதையும் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 02.11.2022..

Related posts:

தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக...
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்க...