புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சாதகமான முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, February 2nd, 2021

கரைச்சிப் பிரதேச செயலக பிரிவுக்குள் புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக பல தரப்புக் கருத்துக்களையும் கவனமாகக் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுவிடயம் தொடர்பாக விரைவில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து சாதகமான முடிவை எடுத்துத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

கரைச்சிப் பிரதேச செயலகத்துக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பலதரப்பட்டவர்களினது அவிப்பிராங்களை ஆகட்டறிந்தபின் கருத்து ரெிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

கரைச்சி் பிரதேச செயலக பிரிவில் மக்கள் தொகை கூடிய கிராமசேவையாளர் பிரிவுகளான கோணாவில், அம்பாள்நகர், பாரதிபுரம், மாயவனூர் ஆகியவற்றை இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளாகப் பிரிப்பது தொடர்பாகப் பேசப்பட்டபோது, இதுதொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

அத்துடன் கிளிநொச்சி அம்பாள்நகர் சாந்தபுரம் பகுதி முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குள் வருவது தொடர்பாகவும், அந்தப் பகுதியை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு வரைவில் அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத மண்ணகழ்வுப் பிரச்சினை தொடர்பாக பல தரப்பினராலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டபோது, இது தொடர்பில் பொலிஸாரின் கருத்தை அந்த இடத்திலேயே கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ், மண்ணகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய பொலிஸ் ஆளணி கிளிநொச்சியில் கிடையாது என்ற பொலிஸ் தரப்பு சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில் விரைவில் பொலிஸ்மா அதிபருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன் நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுடைய வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அவர்களுடைய நெல் உற்பத்தியை உள்ளூரிலேயே உரிய முறையில் காயவைத்து, அரிசியாக்கி, அரிசியாகவே வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து கலந்துரையாடியதுடன், அடுத்த போகத்துக்குள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் சமுர்த்தி திணைக்களத்தின் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தில் கூடியவரையில் உள்ளூருக்குப் பொருத்தமான மரக்கன்றுகளை, உள்ளூரிலேயே உற்பத்தி செய்து வழங்குமாறு ஆலோசனை வழங்கியதுடன், இதுதொடர்பில் பொருத்தமான கன்றுகள் குறித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்பாளருமான வை.தவநாதன் முன்வைத்த கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளுமாறு மாவட்ட சமுர்த்தி முகாமையாளரைப் பணித்த்திருந்தார்..

மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, இதற்காக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் அங்கு விளக்கமளித்ததுடன், கிளிநொச்சி நீர் சுத்திகரிப்புப் பொறிமுறையைச் சீர்ப்படுத்த அமைச்சர் டக்ளஸ் ஏற்கனவே எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றியும், விரைவில் உலக வங்கியின் நீர்வழங்கல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு மாவட்டத்தின் 40 சதவீத குடிநீர்த் தேவை பூர்த்திசெய்யப்படும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் சாரங்கன் தெரிவித்துள்ளமையை அனைவருக்கும் அறியத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...