வடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

Tuesday, November 13th, 2018

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற, பனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேற்படி காணி விடுவிப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பொது மக்களது காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறு கூறியிருப்பதுடன், விடுவிக்கப்படும் காணிகள் தொடர்பான விபரங்களை தனக்கும் அனுப்பி வைக்குமாறும், இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கும் அறிவித்தல்களை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், மேற்படி காணிகள் மிக விரைவில் பொது மக்களது பயன்பாட்டுக்கென விடுவிக்கப்படவுள்ளன. எனவே வடமராட்சி கிழக்கில் இதுவரை காலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் தமது காணிகளை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுற...
அரசாங்கத்தின் பாகுபாடற்ற அபிவிருத்திகளின் அ;டயாளங்களில் ஒன்றுதான் அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் அபி...