அரசாங்கத்தின் பாகுபாடற்ற அபிவிருத்திகளின் அ;டயாளங்களில் ஒன்றுதான் அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் அபிவிருத்தி – பணிகளை ஆரம்பித்துவைத்த அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, November 4th, 2021

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி மேற்கொள்ளப்படுவதனை வெளிப்படுத்தும் வகையில் அக்கராயன் ஆற்றிற்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக ஆறுகளை பாதுகாப்போம் வேலைத் திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தினை புனரமைப்பதற்காக நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருநிதது.

இந்நிலையில் குறித்த குளத்தின் வேலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை கிளிநொச்சி, புதுமுறிப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நன்னீர் மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளை அவதானிப்பதற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் கிளிநொச்சி, செல்வாநகர் செந்தணல் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட அமரர் யசோதரன் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுகா...
கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமா...
கிளிநொச்சி – புன்னைநீராவியில் 5.3 மில்லியன் ரூபா செலவில் விவசாய உற்பத்தி களஞ்சியசாலை – கட்டுமாணப் பண...