நல்லூரில் தூக்குக் காவடி தடுக்கப்பட்டது வருந்தத்தக்க விடயம் – டக்ளஸ் எம்.பி. கவலை!

Monday, August 26th, 2019


வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின்போது பக்தர்களின் நேர்த்திக்கடனை நிறைவு செய்யவிடாது தூக்குக் காவடிகளை ஆலய வழாகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டமை வருந்தத் தக்க செயற்பாடு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக இம்முறை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் போது அதிகளவான பாதுகாப்பு கெடுபிடிகள் காணப்பகின்றது.

இதனால் இம்முறை தூக்கு காவடிள் ஆலய வளாகத்திற்கள் அனுமதிக்கப்படாது குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்களது நேர்த்திக் கடன்கள் முழுமையாகாது தடுக்கப்பட்டதாக பலர் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்து ஒரு நடைமுறை இம்முறை தடுக்கப்பட்டதானது மிகவும் வருத்தமடையச் செய்யும் செயலாகவே காணப்படுகின்றது. நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு ஒருபோதும் இடமளித்திருக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: