வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி நிலங்களில் துரித விவசாய நடவடிக்கை – ஒட்டகப்புலத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Wednesday, March 27th, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலி.வடக்கில் படையினர் வசமிருந்த காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து குறித்த காணி நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் மக்களுக்கு அவற்றை முன்னெடுப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டடுள்ளார்.

விடுவிக்கப்பட்ட காணி நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களை அழைத்து அவர்களின் எண்ணப்படுகளை அறிந்துகொள்ளும் முகமாக ஒட்டகப்புல அமலஉற்பவ தேவாலையத்தில் இன்றையதினம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

முன்பதாக வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்களாக உயர்பாதகாப்ப வலயம் என்ற போர்வையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த சுமார் 234.83 ஏக்கர் காணி நிலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் மயற்சி காரணமாக கடந்தவாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
போதைப்பொருளுடன் யார் தொடர்புபட்டாலும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொலிசாரை கடுமையாக...