வடக்கின் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, February 8th, 2019

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களுக்கான ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புகின்றபோது, அந்த மாகாணம் சாராத வேறு மாகாணங்களின் ஆட்களைக் கொண்டே பெரும்பாலும் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த வெற்றிடங்களுக்காக நியமனம் பெறுகின்றவர்கள் மொழி மற்றும் சூழல் பரிச்சமற்ற நிலையில் தாங்களும் அவஸ்தைபட்டு, பயனாளிகளான மக்களையும் சிரமங்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

அத்துடன், இவ்வாறான நியமனங்களைப் பெறுவோர் ஒரு குறுகிய காலம் வடக்கு மாகாணத்திலே பணியாற்றிவிட்டு, பின்னர் அவரவர்களது மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்று விடுகின்றனர். இதன் காரணமாக வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்வதற்கு ஆட்கள் இல்லாத நிலையும், ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு வெற்றிடங்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

அதேநேரம், தொழில்வாய்ப்புகள் அற்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் வடக்கு மாகாணத்திலே இன்னமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த விடயங்களை அவதானத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்களை, அந்த மாகாண அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் என்ற விடயத்தையும் மீண்டும் நான் அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

அந்த வகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கான சுயலாப அரசியலை கைவிட்டு, எமது மக்களது இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இப்போதாவது முன்வர வேண்டும் என்ற கோரிக்iகியனையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அத்துடன் மேலும் சில அரச நிறுவனங்கள் இங்கே மேற்படி குழவின் அவதானிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவை தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் அநேகமானவை அவற்றின் மக்கள் நலன்சார் பணிகளை விடுத்து, ஒரு சிலரது சுயங்கள் கருதியதான செயற்பாடுகளுக்கே தொடர்ந்து வழிவிட்டுக் கெண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு பரிந்துரை செய்திருக்கின்ற விடயங்கள் தொடர்பில் அந்தந்த நிறுவனங்கள், அவை சார்ந்த அமைச்சின் உயரதிகாரிகள் அதிக அவதானமெடுத்து, அவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

நிர்வாக அதிகாரிகள் தெரிவின்போது தமிழ் மொழி ரீதியான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதா?
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திது...
வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது நவீன மீன்பிடித் துறைமுகம் – அமைச்சர் டக்...