அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை- அனலைதீவு போக்குவரத்து சேவைக்கு புதிய பேருந்து!

Wednesday, August 31st, 2022


….
அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின்  பிரகாரம்  புதிய பேருந்து ஒன்று வழங்கா வைக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின்  பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, ஊர்காவற்றுறை பிரதேச சபையில் தலைவர் ஜெயகாந்தன் ஊடாக சந்தித்து தமது பிரதேத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரைச்சினைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கடந்த 19 ஆம் திகதி கலந்துரையாடியிருந்தனர் .

குறிப்பாக அனலைதீவில் மக்களின் போக்குவரத்திற்காக பாவனையில் இருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பழுதடைந்த நிலையில் இருப்பதினால் வைத்தியசாலைக்கு செல்பவர்கள் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களும் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கு புதிதாக ஒரு பஸ்வண்டியை தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

மேற்படி விடயங்களை கருத்தில் எடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிரதான முகாமையாளர் குணபாலச்செல்வத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் யாழ்ப்பாண சாலை முகாமையாளர் குணசீலனினால் அனலைதீவுக்கு புதிய  பேரூந்து ஒன்று கடற்படையினரின் உதவியுடன் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றிலிருந்து மக்களின் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. – 31.08.2022

Related posts:

நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...
மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை – ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலே...

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் - டக...
முல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மா...