போதைப்பொருளுடன் யார் தொடர்புபட்டாலும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிசாரை கடுமையாக எச்சரித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, December 28th, 2023

யாழ்ப்பாணத்தில் போதைவஸ்துடன் யார் சம்பந்தப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிசாரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போதைவஸ்து விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகைியில் –

அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப் பொருள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 அவரது யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு பொலிசாரால் பரிசோதனையிட சென்றபோது அங்கே பரிசோதனையிட அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அமைச்சர்,

அவ்வாறு நீங்கள் செயற்பட முடியாது. எவராக இருந்தாலும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என தெரிவித்தார்.

இதேநெரம் வடக்கு மாகாணத்தில் போதைவஸ்துடன் தொடர்புடையோர் யாருடைய செல்வாக்கினையும், பயன்படுத்த முடியாது. யாராக இருந்தாலும் கட்டாயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிசார் அந்த விடயத்தில் தவறிழைக்கக் கூடாது.

இதேநேரம் என்னுடைய பெயரை பாவித்தால் கூட நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திது...
தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் துறைசார் தரப்புக்களு...