ரணிலின் வெற்றியில் பங்கெடுப்பதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ்!

Monday, September 16th, 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பது எனது பொறுப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்து எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஈபிடிபியின் வழிமுறைகளை ஏற்று மக்கள் அணிதிரண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக  மக்கள்  எதிர்கொள்ளும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பது தன்னுடைய பொறுப்பு எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

000

Related posts:

எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன - டக்ளஸ் தேவானந்தா!
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் க...