டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை என்றும் நாம் மறவோம் – நன்றியுணர்வுடன் கூறும் இரணைதீவு மக்கள்!

Tuesday, May 15th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் விசேட குழுவொன்று குறித்த பகுதிக்கு வருகைதரும் இச்சந்தர்ப்பத்தில் தமக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்தது மட்டுமல்லாது அதை செயல் வடிவிலும் காட்டிய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நாம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எமது பகுதிக்கு அவர் நேரில் மீண்டும் ஒருதடவை வருகைதர வேண்டும் என்றும் இரணைதீவு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றில் இரணைதீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு குறித்த பகுதியை ஆராய்வதற்காக விசேட குழு ஒன்றை அனுப்பவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார். அதன் பிரகாரமே குறித்த விஜயம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

தமக்கான வாழ்வியலுக்கான நிரந்தர தீர்வு குறித்த குழுவினது வருகையின் ஊடாக கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்காத்திருக்கும் இரணைதீவு மக்கள் குறித்த குழு வருகைதருவதற்காக பாடுபட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர். மேலும் தமது வாழ்வியல் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறி அரசியல் இலாபம் தேடும் இதர அரசியல் வாதிகளைவிட தான் கொடுத்த வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுத்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவை அவர்களை எமது பகுதிக்கு மீண்டும் ஒரு தடவை வருகைதருமாறும் அவரது வருகையை தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Untitled-8 copy

Related posts:


சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...
பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்ட...