புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் – டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று  பிரதமர்  நடவடிக்கை!

Saturday, May 21st, 2016

புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கை வங்கி மக்கள் வங்கி இலங்கை சேமிப்பு வங்கி பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியன செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ள அதே சமயம் அதன் இரண்டாம் கட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. அதனை  செயற்படுத்துவதற்காக உரிய வங்கிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தொழில் பயிற்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி சுயதொழில் சந்தர்ப்பங்களை உருவாக்க  ஏதாவது நடைமுறைகளை எடுக்க முடியுமா என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  கேள்வி  எழுப்பியிருந்தார். குறித்த கோரிக்கைக்க பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

தொழில் வழங்கல் அவர்கள் பெற்றுள்ள தேர்ச்சி மட்டத்தின் அடிப்படையில்  தீர்மானிக்கப்படும்.அது போன்றே அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும் போது ஆட்சேர்க்கும் பரீட்சைகள் மூலம் அரச சேவைக்கு ஆட்சேர்த்தல் பற்றி தீர்மானிக்கப்படும்.

அது போன்றே மீள் திருத்த மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைகளுக்கு முகங் கொடுத்து கணவனை இழந்த பெண்களின் தலைமையிலான குடும்பங்களுக்கும் புனர் வாழ்வளித்து சமூகமயமாக்கிய நபர்களுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை முன்னேற்ற 2015 வரவு செலவுத் திட்ட ஆலோசனைகள் மூலம் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒருகுடும்பத்திற்கு ரூபாய்  10000 பெறுமதியான செயற்றிட்டங்கள் வீதம் 12015 குடும்பங்களுக்காக செயற்றிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் கீழ் விவசாயம் விலங்கு பராமரிப்பு சிறு கைத்தொழில் மற்றும் பல்வேறு துறைகளில் வருமானம் உருவாக்குகின்ற வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் தொடர்ச்சியாக செயற்படுபடுத்தி அவர்களது சமூக பொருளாதார மட்டத்தை நிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தள்ளார்.

Related posts:


முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவான...
தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்...