சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நடவடிக்கை!

Friday, January 18th, 2019

தொழில்வாய்ப்புக்காகச் சென்று சவுதி அரேபியாலில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருக்கும் இலங்கைப் பெண் தொழிலாளர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களை மீளவும் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் துறைசார் தரப்பினரூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக தொழில் வாய்ப்புக்காக சவுதி அரேபியா சென்று பல வருடங்களாக தொழில்தரு நிறுவனங்களால் சம்பளங்கள் வழங்கப்படாத நிலையில் தமது உறவுகளுடன் தொடர்புகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் 23 க்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சவுதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

குறித்த பெண்கள் தமது அவலநிலை குறித்த சமூகவலைத்தளமூடாக தெரியப்படுத்தியுள்ளதுடன் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தமக்கான நீதியை பெற்றுத்தந்து தமது குடும்பங்களுடன் தாம் மீளவும் இணைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுதருமாறும் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட 23 பெண் தொழிலாளர்களது நிர்க்கதி நிலை தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தியதுடன் அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதோடு தொழிலாளர்களது பாதுகாப்பு மற்றும் இலங்கைக்கு மீள வவழைப்பது தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில் துரிதகதியில் பெண் தொழிலாளர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களை மீளவும் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் துறைசார் தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மு...
கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...

வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...
30 ஆம் திகதிய இலங்கை - இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டி...